மன சாந்தி
- இதுவும் கடந்து போகும் -
சுவிட்சர்லாந்தில் உள்ள எமது சமூகத்தைச் சேர்ந்த பலரும், சுவிஸ் நாட்டில் காணப்படுகின்ற சிக்கலான சமூக கலாச்சார அமைப்புக்களின் தன்மை மற்றும் முற்றிலும் வேறுபட்ட மொழியின் காரணமாக பல்வேறு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குள்ளான்றார்கள்.
சில நேரங்களில் நமது வாழ்க்கை நமக்கு சுயமாகத் தீர்த்துக்கொள்ள முடியாத சிக்கல்களையும் கவலைகளையும் பரிசளிக்கலாம். இந்த உளம்சார் பிரச்சனைகள் சில சமயங்களில் எமது உடல் நலத்தைப் பாதிக்கக் கூடியளவு தாங்கமுடியாத ஒன்றாக மாறலாம்.
இதுபோன்ற சமயங்களில், நம்மையும் நமது கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ளும் ஒரு நடுநிலையான நபரை அணுகி, நம்பிக்கையான சூழ்நிலையில் ஆலோசனையைப் பெறுவது உதவிகரமாக இருக்கும்.
'மன சாந்தி'யானது நமது சமூகத்தில் ஒருவருக்குத் தேவைப்படும் நேரங்களில் ஒரு தீர்வை அல்லது ஒரு வழியைக் கண்டறிய உதவுவதற்காக நிறுவப்பட்ட ஒன்றாகும்.
தொடர்பு கொள்வதற்கு முன்பாக படிக்கவும்.