top of page

மன சாந்தி பற்றி

 

பெரும்பாலான நேரங்களில், எம்மால் தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் விளைவாகவே நமது மிகப்பெரிய பிரச்சனைகள் உருவாகின்றன.


நான் சுவிட்சர்லாந்தில் வசிக்க ஆரம்பித்ததிலிருந்தே, மொழித் தடை மற்றும் சுவிஸ் சமூக அமைப்பின் சிக்கல்த்தன்மை போன்ற காரணங்களால் வழிகாட்டுதல் தேவைப்படும் எமது சமூகத்தைச்சேர்ந்த பலருக்கு   உதவி வந்துள்ளேன்.


அவமானம், விமர்சனம், வதந்தி போன்றவற்றிலுள்ள மனப்பயத்தினால் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூட பேச முடியாமல் போய்விடுகிறது என்பதுதான் இங்கு பெரும்பாலான மக்கள் சொல்லும் விஷயமாகும்.


எமது சமூகத்திலுள்ளவர்கள் தங்களது சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் கண்டறிவதற்கு உதவ விரும்புகிறேன்.

logo_edited.png

01

இலவச ஆலோசனை

02

இரகசியம் பேணும் தன்மை

03

நிபுணத்துவம்

04

மன அமைதி

இது எனது ஓய்வு நேரத்தில் நமது சமூகத்திற்கு உதவ என்னால் வழங்கப்படும் இலவச சேவையாகும்.


தினந்தோறும் எனது இணையத்தளத்தில் கிடைக்கப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையில்,

 

நான் ஒவ்வொன்றாகப் பதிலளிக்க சிறிது நேரதாமதம் ஏற்படலாம்.அவ்வாறான ஏதேனும் தாமதங்கள் ஏற்படின் பொருத்தருளுமாறு முன்கூட்டியே கேட்டுக்கொள்கிறேன்.


நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் உங்களது சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டும் எனது பதில் ஆலோசனைகள் அமையும்.


குறிப்பிட்ட காலக்கெடுவினுள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய தேவையிருப்பின், தயவுசெய்து அதை contact pageஇல் உள்ள கருத்துப் பெட்டியில் குறிப்பிடவும். இதன்மூலம் என்னால் சரியான நேரத்தில் உங்களைத் தொடர்புகொள்ளமுடியுமாக இருக்கும்!

bottom of page