சமர்ப்பணம்
'மன சாந்தி' எனது தந்தை
திரு.பாலசந்திரன் சாந்திகுமார்
(19.09.1951-10.08.2009, UK)
நினைவாக நிறுவப்பட்டுள்ளது.
எனது தந்தை நமது தமிழ்ச்சமூகம் செழிக்க உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவராவார்.
என் பெயர் மேனகா.
இந்தச் சேவையைப் பயன்படுத்த முடிவெடுப்பதற்கு முன்பாக என்னைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
நான் இங்கிலாந்தில் பிறந்தேன்.
நான் சட்ட மூலோபாயம், நீதி, ஜனநாயகம், குடியுரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றில் முக்கிய கூறுகளை உள்ளடக்கிய சர்வதேச ஆய்வுகளுடன் கூடிய அரசியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன்.
இருந்தபோதிலும், நான் இன்னும் சுவிட்சர்லாந்தில் வழக்கறிஞராக வேலைசெய்யத் தகுதிபெறவில்லை.
இதற்கிடைப்பட்ட காலங்களில், என் தந்தை செய்தது போன்றே எமது சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்.