top of page

பயன்பாட்டு விதிமுறைகள்

முற்கூற்று 


"மன சாந்தி" மற்றும் "மேனகா மதிவதனன்" இதற்குப்பின் "சேவை வழங்குநர்" என்று குறிப்பிடப்படுகின்றனர்.


இந்த ஆலோசனைச் சேவை சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் கிடைக்கும்.
அவர்கள் இனி "பயனர்கள்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.


1. இந்த இணையத்தளம் வழியாக மட்டுமே தொலைபேசி முன்பதிவுகள் கிடைக்கும். விடயத்தைப் பொறுத்து, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. மின்னஞ்சல் மூலமான ஆலோசனை பொதுவாக வாரத்தில் ஏழு நாட்களிலும் பயன்படுத்தப்படலாம். தொலைபேசி ஆலோசனை உறுதி செய்யப்பட்ட நேரங்களுக்கு மட்டுமே உட்பட்டது.


2. ஆலோசனையானது சமூக-உளவியல், கல்வி அல்லது பொது இயல்புடையதாக இருக்கலாம்.  மன சாந்தி ஆலோசனை என்பது மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆலோசனையானது ஆன்லைன் மற்றும் தொலைபேசி உரையாடல்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


3. இந்த ஆலோசனைகள் அடிப்படை ஆலோசனைகள் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்: நீண்ட காலத்திற்குரிய ஆலோசனை செயல்முறைகள் அல்லது மருத்துவ அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படாது.


4. தனிப்பட்ட தகவல், வழங்குகை, செயல்பாடுகள் அல்லது சேவைகளை மாற்ற அல்லது மறுவடிவமைக்க அல்லது முன்னறிவிப்பு இல்லாமல் அவற்றை ஆஃப்லைனில் எடுக்க சேவை வழங்குநருக்கு உரிமை உள்ளது. சில தகவல்கள் எதிர்காலத்தில் கிடைக்காவிட்டாலோ அல்லது அதன் முந்தைய படிவத்தில் கிடைக்காவிட்டாலோ ஏற்படும் விளைவுகளுக்கு சேவை வழங்குநர் பொறுப்பல்ல. இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் புதுப்பித்ததாகவும், விரிவானதாகவும், முழுமையானதாகவும் இருக்கும் என்பதற்கு சேவை வழங்குநர் உத்தரவாதம் அளிக்க முடியாது.


5. இணையதளம் மற்றும் சேவைகளின் குறைபாடுகளுக்கும்  சேவைக் குறைபாடுகளுக்கும்  சேவை வழங்குநர் உத்தரவாதம் அளிக்க முடியாது.


6. செயலாக்கத்திற்குத் தேவையான தரவு, சேவை வழங்குநரால் பொருத்தமான  விதிமுறைகளுக்கிணங்கச் சேமிக்கப்படும். தேவைப்பட்டால், ஆலோசனையின் போது சார்ந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு அனுப்பப்படும். அனைத்து தனிப்பட்ட தரவுகளும் இரகசியமாகவும், மிகுந்த கவனத்துடனும் கையாளப்படுகின்றன.

 

7. சேவை வழங்குநர் இயலுமானவரையில் சரியான மற்றும் முழுமையான தகவலை வழங்க முயற்சி செய்கிறார். இருப்பினும் இது, உண்மைத்தன்மை, முழுமை, மூன்றாம் தரப்பு உரிமைகளை மீறாதது, வைரஸ்களிலிருந்து காக்கப்பட்டது  அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொருந்தக்கூடியது  என்பதற்கு   எவ்வித உத்தரவாதமும் இல்லை. மன சாந்தியின் பொறுப்பு சட்டப்படி அனுமதிக்கப்படும் வரை விலக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நேரடி அல்லது மறைமுக சேதம், அதன் விளைவாக ஏற்படும் சேதம், லாப இழப்பு அல்லது துணைப் பணியாளர்களால் ஏற்படும் சேதங்களுக்கு சேவை வழங்குநர் பொறுப்பல்ல.
கூட்டாளர் நிறுவனங்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினரின் சேவைகளுக்கு சேவை வழங்குநர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. பிற பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் நடத்தையின் விளைவாக ஒரு பயனர் அல்லது மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் சேதத்திற்கு சேவை வழங்குநர் பொறுப்பல்ல.
தகவல் உரைகள் மற்றும் அறிவுரைகளில் இருந்து தகவல் மற்றும் வழிமுறைகளை பயனர்கள் புரிந்துகொண்டு செயல்படுத்தும் விதத்திற்கான எந்தவொரு பொறுப்பையும் சேவை வழங்குநர் ஏற்கமுடியாது. விடுபட்ட தகவல் அல்லது ஆலோசனைக்கு சேவை வழங்குநர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. பயனர்களின் தரப்பில் ஆலோசனையை செயல்படுத்துவதன் விளைவாக ஏற்படும் செயல்களின் விளைவுகளுக்கான எந்தவொரு பொறுப்பும் விலக்கப்பட்டுள்ளது. தகவல்களைக் கையாள்வதற்கும் அவர்களின் செயல்களுக்கும் பயனர்கள் பொறுப்பு.
மன சாந்தியுடன் தொடர்பை ஏற்படுத்துதல் மற்றும் ஆலோசனையின் போது நடத்தப்படும் தொடர்பு ஆகியவை ஒப்பந்தக் கடமைகளை ஏற்படுத்தாது.

 

8. தனிப்பட்ட விதிகளின் சாத்தியமான செல்லாத தன்மை, மீதமுள்ள விதிகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. பயன்பாட்டு நிபந்தனைகளின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிகள் எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ, பயனற்றதாகவோ அல்லது வேறுவிதமாக செயல்படுத்த முடியாததாகவோ இருப்பதால், ஏனைய பயன்பாட்டு நிபந்தனைகளின் செல்லுபடியாகும் தன்மை பாதிக்கப்படாது. கேள்விக்குரிய விதிகள் செல்லாது என்பதை இரு தரப்பினரும் அறிந்திருந்தால் நல்ல நம்பிக்கையுடன் தொடந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

 

9. எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் உதவியை நிறுத்த அல்லது திரும்பப் பெற சேவை வழங்குநருக்கு உரிமை உள்ளது. சேவை வழங்குநர் எந்த நேரத்திலும் பயன்பாட்டு விதிமுறைகளை புதுப்பிக்கலாம் அல்லது மாற்றலாம்.
 

bottom of page